வாரியத்தின் அமைப்பு
நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974ன் படி மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் கீழ்கண்டவாறு உறுப்பினர்களை கொண்டுள்ளது.
- தலைவர், மாநில அரசு நியமிக்கக்கூடிய தலைவர் பதவிக்குரியவர் சிறப்பு நுண்ணறிவு அல்லது செயல்முறை திறனாய்வு (சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய இனங்கள்) அல்லது நிர்வாக செயல்பாடு சிறப்பறிவு பெற்றவராக இருத்தல் வேண்டும்.
எனினும் தலைவர் முழு நேரம் அல்லது பகுதி நேர பொறுப்புடன் இருக்க மாநில அரசு ஆணைப்பிறப்பிக்கலாம். - மாநில அரசு சார்புடைய அலுவலர்கள் ஐந்து நபர்களுக்கு அதிகமாகாமல் உறுப்பினர்களாக நியமிக்கலாம்.
- மாநில அரசு, மாநிலத்திற்குள் செயல்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளை வாரிய (5 நபர்களுக்குள்) உறுப்பினர்களாக நியமனம் செய்யலாம்.
- அரசு சாரா உறுப்பினர் (3 நபர்களுக்குள்) விவசாயம், மீன்வளம், தொழில் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்களை உறுப்பினராக நியமனம் செய்யலாம்.
- அரசு நிர்வகிக்கும் தொழிற்சாலைகள் அல்லது தொழிற்கழகங்களை சார்ந்த பொறுப்புடையவர்கள் இருவரை உறுப்பினராக மாநில அரசு நியமனம் செய்யலாம்.
- வாரியத்தின் முழுநேர பணியின் பொருட்டு உறுப்பினர் செயலர் பதவிக்கு மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நோக்குடைய பொறியியல், அறிவியல் அல்லது மேலாண்மை சிறப்பறிவு பெற்றவரை மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும்.
மேற்சொன்னபடி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது கீழ்கண்டவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. - ஒரு முழுநேர தலைவர்
- ஒரு முழுநேர உறுப்பினர் செயலர்
- மாநில அரசைச்சார்ந்த 5 அலுவலர்கள்
- உள்ளாட்சி நிறுவனங்களின் சார்பில் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்கள்
- விவசாயம், தொழில் மற்றும் மீன்வளம் ஆகிய தொழில்களைச் சார்ந்த 3 அலுவல் சாரா உறுப்பினர்கள்
- மாநில அரசு நிறுவனங்கள் அல்லது அரசு கழகங்களை சார்ந்த 2 உறுப்பினர்கள்