தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

நீர் தர கண்காணிப்பு

உள்நாடு நீரின் தன்மையை 2 பெரிய திட்டங்கள் மூலம் அதாவது 1984-ஆம் ஆண்டிலிருந்து புவி சுற்றுபுறச்சூழல் கண்காணிப்பு திட்டம் (GEMS) மூலமும், 1988-ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் (MINARS) மூலமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணித்து வருகிறது. தற்போது மினார்ஸ் (MINARS) திட்டத்தின் கீழ் காவிரி, தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை ஆகிய நதிகளும் மற்றும் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு மற்றும் செங்குன்றம் ஆகிய ஏரிகளும் கண்காணிக்கப்படுகின்றன. ஜெம்ஸ், மினார்ஸ் ஆகிய இரு திட்டங்களின் கீழ் காவிரி ஆறு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது 55 இடங்களில் நீரின் தன்மையை கண்காணித்து வருகிறது. இந்த திட்டங்களுக்கு டெல்லியிலுள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிதி உதவி செய்கிறது.

பொதுவாக ஆற்று நீரின் தன்மை பரிந்துரைக்கப்பட்ட ‘ஏ’ ‘பி’ ‘சி’, ‘டி’, ‘இ’ மற்றும் இ-க்கு கீழ் என பிரிக்கப்பட்டு அதன் பயன்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்திய தர நிர்ணயம் IS 2296 - 1982 - ன்படி ஆற்றுநீரின் அடிப்படை மற்றும் அதன் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாடு:

ஏ- குடி நீர் ஆதாரம் முறையான சுத்திகரிப்பின்றி ஆனால் நோய்கிருமி நீக்கப்பட்டபின்
பி - வெளிபுறக்குளியல் (நெறிமுறை படுத்தப்பட்ட)
சி - குடி நீர் ஆதாரம் முறையான சுத்திகரிப்பு மற்றும் நோய் கிருமி நீக்கப்பட்டபின்
டி - வன மற்றும் மீன்வள அபிவிருத்திக்கு உகந்தது
இ-நீர்பாசனத்திற்கும், தொழிற்சாலை வெப்ப குளிர்விப்பிற்கும், கட்டுப்படுத்தப்பட்ட கழிவுகளை அகற்றுவதற்குமான நீர்
‘இ’க்கும் கீழ் - மேற்கண்ட ஏ முதல் இ ஆகியவற்றிக்கு உட்படாத தரம்

காவிரி ஆறு மற்றும் அதன் கிளைகள்

தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆறுகளில் ஒன்றான காவிரி, மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதி நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளிக்கிறது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் செயல்களினால் ஏற்படும் மாசின் பாதிப்பை அறிய காவிரி ஆறு ஒரு முக்கிய ஆறு என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீரின் தன்மை ஜெம்ஸ் திட்டத்தின் கீழ் 4 இடங்களிலும், மினார்ஸ் திட்டத்தின் கீழ் 29 இடங்களிலும் ஆக மொத்தம் 33 இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. இந்த இடங்கள் தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவு மற்றும் உள்ளாட்சி கழிவுநீர் ஆற்றில் சேரும் இடங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கண்காணிப்பு நிலையத்தைப் பொறுத்தவரை பல்வேறு வகைப்பட்ட பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரிகளின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வுகள் சேலத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் தில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ளபடி மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு நீர்மாதிரி நிலையங்களில் எடுக்கப்பட்ட காவிரி நீர் தன்மையின் சராசரி அளவுகளை இணைப்பு 9 ‘அ’, ‘ஆ’ மற்றும் ‘இ’-ல் காணலாம்.

பொதுவாக சுகாதாரமற்ற நடவடிக்கைகள் முழுவதும் சுத்திகரிக்கப்படாத அல்லது பாதி சுத்திகரிக்கப்பட்ட நகரக் கழிவுகள் ஆற்றில் நேரிடையாகவோ மறைமுகமாகவோ கலக்குதல் ஆகிய காரணங்களினால் காவிரிபடுகை மாசடைந்துள்ளது என்பதை இவ்வாண்டின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

காவிரி ஆற்றின் நீரின் தன்மை மேட்டூர், முசிறி ஆழ்துளை கிணறு, பத்திரகாளியம்மன் கோவில், சிறுமுகை, பவானிசாகர், மடத்துக்குளம், கொள்ளிடம், கருத்தட்டான்குடி, கும்பகோணம், மயிலாடுதுiறை மற்றும் சத்தியமங்கலம் பிரிவு ஆகிய இடங்களில் ‘பி’-ன் படி உள்ளது.

காவிரி ஆற்றின் நீரின் தன்மை முசிறி படகுத்துறை, பள்ளிப்பாளையம், பவானி, ஆர்.என் புதூர், வைரப்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர், திருமுக்கூடல், திருச்சி மேல் ஓடை, திருச்சி கீழ் ஓடை, பிச்சாவரம், குமாரபாலையம், ஊராட்சிக்கோட்டை, சீராம்பாளையம், புகளூர், பேட்டைவாய்த்தலை, மற்றும் காளிங்கராயன் கால்வாய் (பி5), (பி10) ஆகிய இடங்களில் பிரிவு ‘சி’-ன் படி உள்ளது.

வைகை ஆற்று நீரின் தன்மை பிரிவு ‘டி’-ன் படி உள்ளது.

கல்லணை ஆற்று நீரின் தன்மை பிரிவு ‘இ’-ன் படி உள்ளது.

காவிரி ஆற்றின் நீரின் தன்மை, திருமணிமுத்தாறு, வசிஸ்டா மற்றும் சரபங்கா ஆகிய இடங்களில் நீரின் தன்மை பிரிவு ‘இ’-க்கும் கீழ் உள்ளது.

தாமிரபரணி ஆறு

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்தப்படி, தாமிரபரணி ஆற்றின் நீரின் தன்மையை பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் 12 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இடங்களில் கண்காணித்து வருகிறது. நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரிகளின் தன்மைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ஆய்வுகள் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

தாமிரபரணி ஆற்று நீரின் தன்மை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய இடங்களில் பிரிவு ‘ஏ’-ன் படி உள்ளது.

திருவிடைமரூதூரில் பிரிவு ‘பி’-ன் படி உள்ளது.

பாபநாசம், சேரன்மாதேவி, கொக்கிரகுளம், மொரப்பநாடு, ஆத்தூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், வெள்ளக்கோயில் மற்றும் சீவலபேரி ஆகிய இடங்களில் நீரின் தன்மை பிரிவு ‘டி’-ன் படி உள்ளது.

பாலாறு

வாணியம்பாடி நகராட்சி குடிநீர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள ஒரு இடம் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படுகிறது. இந்த கண்காணிப்பு இடத்தில் சேகரிக்கப்படும் நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரிகளின் தன்மைகள் சென்னையிலுள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆற்றில் நீரின் ஓட்டம் இல்லை என்பதனால் தகவல்கள் வழங்கப்படவில்லை.

வைகை ஆறு

இத்திட்டத்தின் கீழ் வைகை ஆற்று நீரின் தன்மை திருப்புவனம் என்ற இடத்தில் வைகை ஆற்றில் அமைந்துள்ள நீரேற்று நிலைய கிணற்றிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நீர்மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிர் தன்மைகள் மதுரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. வைகை ஆற்று நீரின் தன்மை (ஊற்று கிணற்றில் எடுக்கப்பட்ட நீர்மாதிரி) நிலமட்ட நீருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரிவு ‘டி’ தரத்திற்கு உட்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள் இணைப்பு-11ல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏரிகள்

இந்திய தேசிய நதிநீர் ஆதாரங்களை கண்காணிக்கும் திட்டத்தின் (மினார்ஸ்) கீழ் தமிழகத்தில் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, புழல், பழவேற்காடு மற்றும் செங்குன்றம் ஆகிய 8 இடங்களிலிருக்கும் ஏரிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் அவற்றில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. நீரின் தன்மை அதன் சராசரி அளவுகளில் இணைப்பு-12ல் அளிக்கப்பட்டுள்ளது.

  • வீராணம் ஏரி நீரின் தன்மை, பொதுவாக ‘பி’-ன் படி உள்ளது.
  • ஏற்காடு ஏரி நீரின் தன்மை, பொதுவாக ‘சி’-ன் படி உள்ளது.
  • ஊட்டி, கொடைக்கானல், பூண்டி, செங்குன்றம் மற்றும் போரூர் நீரின் தன்மை பொதுவாக பிரிவு ‘இ’-ன் படி உள்ளது.
  • பழவேற்காடு ஏரி நீரின் தன்மை பொதுவாக பிரிவு ‘இ’-க்கு கீழ் உள்ளது
Continuous Water Quality Monitoring Stations

In order to monitor the water quality of river Noyyal and Kalingarayan canal on continuous basis in the textile industrial belt of Tiruppur and Erode districts, TNPCB installed online continuous water quality monitors at three locations each in Noyyal river and Kalingarayan canal. These stations monitors pH, total dissolved solids, dissolved oxygen on continuous basis. Similarly TNPCB installed three stations in river Thamirabarai. These stations are functioning from October, 2014.

NWMP Data

Annual Report 2023
Annual Report 2022
Annual Report April-2020 To March-2021
Annual Report April-2019 To March-2020

Year Details Year Details Year Details
January to December - 2023 View January to December - 2019 View January to December -2018 View

Vinayaga Chathurthi Festival

Water Quality Reports on Vinayaga Chathurthi - 2023
Water Quality Reports on Vinayaga Chathurthi - 2022
Water Quality of Rivers under NWMP
Year Details Year Details Year Details Year Details
January to December-2022 View January to December-2021 View January to December - 2020 View January to December - 2019 View
S.No Details Download
1 Annual Report of Chennai City Water Ways for River Adyar, Buckingham Canal, Cooum, Otteri Nullah from 2022 to 2023Click Here
2Annual Average of Chennai City Water Ways for River Adyar, Buckingham Canal, Cooum, Otteri Nullah from 2021 to 2022Click Here
3Annual Average of Chennai City Water Ways for River Adyar, Buckingham Canal, Cooum, Otteri Nullah from 2020 to 2021Click Here
4Annual Average of Chennai City Water Ways for River Adyar, Buckingham Canal, Cooum, Otteri Nullah from 2019 to 2020Click Here
5 Annual Average of Chennai City Water Ways for River Adyar, Buckingham Canal, Cooum, Otteri Nullah from 2015 to 2019Click Here